/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்
/
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்
ADDED : ஜன 28, 2025 12:54 AM

ராமநாதபுரம் : இளம் தலைமுறையினர் பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களது தாயின் நினைவாக மகன்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் கோயில் கட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சியில் ஹிந்து கணிக்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் முத்து, மனைவி ராஜாத்தி 55. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் 10 பேரன், பேத்திகள் உள்ளனர். பாரம்பரியமாக ஜோதிடம் பார்த்தல், குறி சொல்லும் தொழில் செய்கின்றனர்.
2024 ஜன.,26ல் ராஜாத்திஉடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாயின் நினைவாக தந்தை, மகன்கள் அவர்களது உறவினர், நண்பர்கள் உதவியுடன் ரூ.6 லட்சத்தில் வீட்டருகே கோயில் கட்டி 6 அடி உயரத்தில் ராஜாத்தியின் பைபர் சிலை அமைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (ஜன.,26) திறப்பு விழா நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மலரஞ்சலி செலுத்தினார். நேற்றுசமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வந்தனர். மகன்கள் ரவி ராவ்ஜி, ஹிரி, சுதனை பலரும் பாராட்டினர்.
ரவிராவ்ஜி கூறுகையில், எங்கள் தாய் ராஜாத்தி அனைவரிடம் பாசமாக நடந்து கொள்வார்.பொதுவாக இக்கால பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காமல் ஆசிரமத்தில் சேர்த்து விடுகின்றனர்.
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எங்களது தாயின் நினைவாக கோயில் கட்டியுள்ளோம். ஆண்டுதோறும் நினைவு விழா கொண்டாட உள்ளோம் என்றார்.

