நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே பேரையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு புயல் செவன்ஸ், மாணவர் மன்றம் சார்பில் தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
பேரையூர் அணி முதல் பரிசு, ஏ.புனவாசல் அணி இரண்டாம் பரிசு, ராமநாதபுரம் அணி மூன்றாம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.