/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசாருடன் கேக் வெட்டி எஸ்.பி., கொண்டாட்டம்
/
போலீசாருடன் கேக் வெட்டி எஸ்.பி., கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2025 04:48 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் இரவு ஆங்கிலப் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் சந்தீஷ் எஸ்.பி., அனைத்து பகுதிகளுக்கும் சென்று கேக் வெட்டி கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், போலீசாருடன் சேர்ந்து சந்தீஷ் எஸ்.பி., அதிகாலை 12:01 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி கொண்டாடினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியதால் உற்சாகத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.