/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் எஸ்.பி., ஆய்வு
/
முதுகுளத்துாரில் எஸ்.பி., ஆய்வு
ADDED : டிச 24, 2024 04:23 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில் டி.எஸ்.பி., உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசுக்கு வருடாந்திர ஆய்வு நடந்தது.
முதுகுளத்துார் டி.எஸ்.பி., உட்கோட்டத்திற்கு உட்பட்ட முதுகுளத்துார், கடலாடி, கீழச்செல்வனுார், தேரிருவேலி, இளஞ்செம்பூர், பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள உடைமைகள் குறித்து ஆய்வு செய்தும், பின் போலீசாரின் கவாத்து பயிற்சிகளை எஸ்.பி., சந்தீஷ் பார்வையிட்டார்.
பின் முதுகுளத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள முக்கிய வழக்குகளின் கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்பு முதுகுளத்துார் டி.எஸ்.பி., உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலை, கொள்ளை, திருட்டு உட்பட முக்கியமான வழக்குகள் சரிபார்த்து ஆவணங்களை மேல் நடவடிக்கையாக நீதிமன்றங்களில் வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி., சந்தீஷ் அறிவுரை வழங்கினார்.
டி.எஸ்.பி.,சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.