தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் சிறப்பு முகாம்

 பரமக்குடியில் சிறப்பு முகாம்

 பரமக்குடியில் சிறப்பு முகாம்


ADDED : ஜன 05, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி எம்.ஜி.ஆர்., நகர் சமுதாய கூடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வி தலைமை வகித்தார். பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சடையாண்டி முன்னிலை வகித்தார்.

அப்போது புதிரை வண்ணார் இன மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் விபத்து, இயற்கை மரணத் தொகை, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவி, பட்டப் படிப்புக்கு உதவித்தொகை என பல்வேறு சலுகைகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.

முகாமில் தாட்கோ, தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us