/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க கிராமத்தில் சிறப்பு முகாம்
/
விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க கிராமத்தில் சிறப்பு முகாம்
விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க கிராமத்தில் சிறப்பு முகாம்
விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க கிராமத்தில் சிறப்பு முகாம்
ADDED : பிப் 11, 2025 04:51 AM
ராமநாதபுரம்: மத்திய அரசு உத்தரவின் படி மண்டபம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமங்களில் பிப்.,18 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான மானிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்கள் வாயிலாக வழங்குகின்றன.
விவசாயிகளின் பெயர், நிலங்கள் தொடர்பான விவரங்கள் வேளாண் அடுக்ககம் என்ற அலைபேசி வலைதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்சமயம் மத்திய அரசு மூலம் அடையாள எண் வழங்குவதற்கான 'பார்மர்ஸ் ரிஜிஸ்ட்டரி' என்ற பெயரில் அலைபேசி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மண்டபம் வட்டாரத்தில் பிப்.,18 வரை ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் நடைபெறும் முகாமில் விவசாயிகள் பங்கேற்று மேற்கண்ட வலைதளத்தில் பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் பெறலாம்.
இதற்காக தங்களுடைய ஆதார் அட்டை நகல், கம்யூட்டர் பட்டா நகல், ஆதாரில் பதிவு செய்த அலைபேசியை கொண்டுவர வேண்டும்.இந்த எண்ணை வைத்து தான் வரும் காலங்களில் விவசாயத்திற்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். விவசாய கடன் அட்டை பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு மண்டபம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம் என திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் செல்வம் தெரிவித்துள்ளார்.

