/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செல்வ மகள் கணக்கு துவங்க நவ.30 வரை சிறப்பு முகாம்
/
செல்வ மகள் கணக்கு துவங்க நவ.30 வரை சிறப்பு முகாம்
ADDED : நவ 13, 2024 10:08 PM
ராமநாதபுரம் ; குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தபால் நிலையங்களில் நவ.30 வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடக்கிறது.
ராமநாதபுரம் தபால் துறை கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தராப்பன் கூறியிருப்பதாவது: இன்று (நவ.14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் நவ.30 வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை மேற்கண்ட சேமிப்பு திட்டங்களில் சேர்த்து பயன் பெறலாம். குறைந்தப்பட்சம் ரூ.250 வைப்பு தொகையுடன் செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு துவங்கலாம். 15 ஆண்டுகளுக்கு 'டெபாசிட்' செய்ய வேண்டும்.
வட்டி, முதிர்வு தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. 50 சதவீதம் வரை படிப்பிற்காக திரும்ப பெறலாம்.திருமணத்தின் போது ஒரு மாதத்திற்கு முன்பே கணக்கை முடித்து விடலாம். குறைந்த பட்சம் ரூ.500 உடன் செல்வ மகன் திட்டத்தில் கணக்கு துவங்கலாம் என்றார்.