/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளி மாநில தொழிலாளர்களை பதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
/
வெளி மாநில தொழிலாளர்களை பதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
வெளி மாநில தொழிலாளர்களை பதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
வெளி மாநில தொழிலாளர்களை பதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
ADDED : நவ 28, 2024 04:58 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான முகாம் நாளை(நவ.29) நடத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இவர்கள் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட இதர ஆவணங்களை பெறாமல் பல இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்துபவர்கள் அவர்களது ஆவணங்களை பெற்று பணியமர்த்த வேண்டும். பணியிடங்களில் போதிய பாதுகாப்பு, குடியிருப்புகள், சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும்.
வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுஉள்ள labour.tn.gov.in/ims என்ற இணையதள முகவரியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாத நிலையில் உயிரிழப்பு சம்பவங்களில் தொழிலாளர் துறை மூலம் வழங்கப்படும் சேவைகளை பெறுவதிலும்,அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின் சொந்த ஊர்களுக்கு சென்று விடும் போது அவர் குறித்த விபரங்களை அறிவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.
எனவே நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவுச் சான்று எண் மூலம் இணைதளத்தில் பதிவு செய்து வெளி மாநில தொழிலாளர் விபரங்களை பூர்த்தி செய்ய நாளை நவ.29ல் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அந்தந்த தொழிலாளர் உதவி ஆய்வாளார்கள் மூலம் நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்று பதிவு செய்யலாம் என ராமநாதபுரம் தொழிலாளர்உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்துள்ளார்.