/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
/
தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்
ADDED : மே 08, 2025 02:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்ய நாளை (மே 9) சிறப்பு முகாம் சாயல்குடியில் நடைபெற உள்ளது.
கடலாடி தாலுகா சாயல்குடியில் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.
நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய தொழிலாளிகள் தங்களது ரேஷன், ஆதார் கார்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் என ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாத்திட்டப்பிரிவு குலசேகரன் தெரிவித்துள்ளார்.