/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணியில் 1354 பேர் சிறப்பு திருத்தம்! நவ. 4 முதல் வீடு வீடாக சென்று ஆவணங்கள் சரிபார்ப்பு
/
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணியில் 1354 பேர் சிறப்பு திருத்தம்! நவ. 4 முதல் வீடு வீடாக சென்று ஆவணங்கள் சரிபார்ப்பு
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணியில் 1354 பேர் சிறப்பு திருத்தம்! நவ. 4 முதல் வீடு வீடாக சென்று ஆவணங்கள் சரிபார்ப்பு
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணியில் 1354 பேர் சிறப்பு திருத்தம்! நவ. 4 முதல் வீடு வீடாக சென்று ஆவணங்கள் சரிபார்ப்பு
ADDED : அக் 31, 2025 11:47 PM
தேர்தல் கமிஷன் உத்தரவின் படி இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவச் சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950ன் பிற பொருந்தக் கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி 2026 ஜன.,1 தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் மேற்கொள்ளும் பணி நடைபெற உள்ளது.
இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள வழிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 12 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற உள்ளது.
பொது வாக்காளர் பதிவு அலுவலர்கள் எந்த ஒரு தகுதியான வாக்காளரையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடக்கூடாது. தகுதியற்றவர்களை வாக்காளர்களாக சேர்க்க கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது.
இதன்படி 1374 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் நவ.,4 முதல் டிச.,4 வரை வீடு வீடாக ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை சென்று கணக்கெடுக்க உள்ளனர்.
அதன் பிறகு ஓட்டுச்சாவடி நிலையங்களை மறு சீரமைத்தல், திருத்தியமைத்தல் டிச.,4க்குள்ளும், வரைவுப் பட்டியலைத் தயாரித்தல் டிச., 05 முதல் டிச., 8 வரையும், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.,9ல் வெளியிட வேண்டும்.
ஜன., 8 வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் 2026 ஜன.,31க்குள் முடிக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு 2026 பிப்.,3க்குள் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்.,7ல் வெளியிடப்பட உள்ளது.
அதன் விவரம் மாநில தலைமை தேர்தல் இணையதளமான http://www.elections.tn.gov.in மற்றும் ராமநாதபுரம் இணையதளமான https://ramanathapuram.nic.in பதிவேற்றம் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்: இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1374 அலுவலர்கள் மூலம் வாக்காளர்களை கணக்கெடுத்து சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணியில் வீடு வீடாக சென்று ஆவணங்களை சரிபார்க்கும் பணி நவ.,4 முதல் டிச.,4 வரை நடைபெற உள்ளது.

