/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை
/
தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை
தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை
தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை
ADDED : அக் 19, 2024 11:22 PM
கமுதி: -பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு விதிகளை மீறி டூவீலரில் வருபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் கூறினார்.
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதியில் கிராமதலைவர்கள், சமுதாய அமைப்பினர், மறவர் இன அறக்கட்டளை நிர்வாகிகள், அன்னதானம் வழங்கும் சமுதாய அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், டி.எஸ்.பி., இளஞ்செழியன் கூறியதாவது: அக்., 30ல் தேவர் ஜெயந்தி, குருபூஜை, அரசு விழாக்களில் போலீஸ் அறிவிப்புகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையில் டூவீலரில் வருபவர்களை பிடித்து வழக்குபதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் இருந்து பசும்பொன்னுக்கு பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் 117 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கமுதி குண்டாறு வழியாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
கிளாமரம், முஷ்டக்குறிச்சி, பேரையூர், அபிராமம் பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படும் என்றார். உடன் சமுதாய தலைவர்கள், மக்கள், போலீசார் பங்கேற்றனர்.