/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீராவியில் சிறப்பு மருத்துவ முகாம்
/
நீராவியில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : அக் 05, 2024 03:57 AM
கமுதி: கமுதி அருகே நீராவியில்வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பால்ராஜ், வட்டாரடாக்டர்கள் ஜெயந்த், விஜய், தலைமையாசிரியர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர்.
இங்கு பொது மருத்துவம், குழந்தை சிறப்பு மருத்துவம், மகப்பேறு, எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை உட்பட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை உள்ளிட்ட உடல் முழு பரிசோதனைகளும் செய்து டாக்டர்கள் அறிவுரையின் படி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் 525க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கலந்து கொண்டு பயன் பெற்றனர். உடன் ஜி.கே.டி., தொண்டு நிறுவன ஊழியர்கள், சுகாதாரபணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.