/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
/
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
ADDED : டிச 17, 2024 03:36 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மார்கழி தனுர் மாத சிறப்பு பூஜைகள் நடந்தன.
வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 44-வதாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் திகழ்கிறது. நேற்று மார்கழி முதல் நாளை முன்னிட்டு அதிகாலை 5:30 முதல் 6:30 மணி வரை சன்னதியில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்பட்டது. கோயில் பட்டாச்சாரியார்கள் கூறியதாவது:
மார்கழி மாதம் தனுர் மாதம். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம்.
இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்னைகளைத் தரக் கூடியது. தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது.
மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டும் இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழி மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாக போற்றப்படுகிறது.
மார்கழி மாதம் அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரை உள்ள 2 மணி நேரத்தை குறிக்கும் சூரிய உதயத்துக்கு முன்பான காலம் பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது என்றனர்.

