ADDED : டிச 17, 2025 05:21 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.
குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணைக்குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம், பூர்ணாஹீதி, யாகசால பூஜைகள், படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று முதுகுளத்துார், கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் சிறப்பு பூஜை நடந்தது.
