ADDED : டிச 31, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அருகே ஓரிவயல் பள்ளி வளாகத்தில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடந்தது.
ஓரிவயல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், 2023 -- 2024 பிரதமரின் குடியிருப்பு திட்டம், 2016 முதல் 2022 வரை நடந்த பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டத்தின் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மலர்மதி முன்னிலை வகித்தார்.
திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வட்டார சமூகத் தணிக்கை பயிற்றுநர் நாகராஜன் விளக்கினார். ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.