/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிச.27, 28, ஜன.3, 4ல் வாக்காளர் சிறப்பு முகாம்
/
டிச.27, 28, ஜன.3, 4ல் வாக்காளர் சிறப்பு முகாம்
ADDED : டிச 25, 2025 05:23 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.,27, 28, ஜன.,3, 4ல் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.
திருவாடானை சட்ட சபை தொகுதியில் டிச.,19 நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 38 ஆண்கள், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 379 பெண்கள், பிறர் 22 என 2 லட்சத்து 73 ஆயிரத்து 439 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.
வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு 31 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்படடு 378 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் துவங்கி உள்ளன. ஆன்லைன் வாயிலாக புதிய வாக் காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இது குறித்து திரு வாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது:
டிச.,27, 28, ஜன.,3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. அதில் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம் கொடுக்கலாம். இதுவரை கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நுாறு சதவீதம் சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.

