/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் ஆன்மிக சொற்பொழிவு விழா
/
பசும்பொன்னில் ஆன்மிக சொற்பொழிவு விழா
ADDED : ஆக 12, 2025 11:07 PM
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத்தேவர் சிந்தனை மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடந்தது.
பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்கத்தேவர் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மூக்கூரான், செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் கோட்டை இளங்கோவன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். ஆப்பநாடு வரலாற்று ஆய்வுக் குழு தலைவர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பா.ஜ., பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒரு தீர்க்கதரிசியாக, ஆன்மிகவாதியாகவும் அரசியல்வாதியாகவும் தேசத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்துள்ளார்.
அதனால் தான் அனைத்து மக்களும் கொண்டாடும் தேசிய தலைவராக பார்க்கின்றனர். பாரத தேசத்தின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம் ஆனால் தேசியத்தின் தலைநகரமாக பசும்பொன் திகழ்கிறது.
ஆன்மிகத்திலும் அரசியலிலும் தேவர் ஆற்றிய பணியை தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது என்றார். பின் தேசியம் காக்கும் தெய்வீகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஏற்பாட்டில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
உடன் தேசிய வலிமை ஆசிரியர் நேதாஜி சுவாமிநாதன், அகில இந்திய டி.என்.டி., பொதுச் செயலாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.