நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் நகர் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் நகர் தலைவர் முகமது சரீப் தலைமையில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
திருவாடானை தொகுதி துணைத் தலைவர் முகமது ரிஸ்வான் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப் பந்தயம், பலுான் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.