/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
/
'முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
'முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
'முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 23, 2025 12:10 AM
ராமநாதபுரம்; முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு ஆன்லைன் மூலம் ஆக.,16க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டு 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் ஆக.,22 முதல் செப்.,12 வரை நடக்கவுள்ளது.போட்டியில் பங்கேற்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறையை துணை முதல்வர் உதயநிதி ஜூலை 17ல் துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் என 5 பிரிவில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மாவட்ட அளவில் 25 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகளும் என ரூ.83.37 கோடி செலவில் நடத்தப்படவுள்ளன.
மாநில அளவில் தனிநபர் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் முதல் பரிசு ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டியில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற முடியும். பள்ளி பிரிவில் பங்கேற்க 01.01.2007 க்கு பின் பிறந்தவராகவும்,6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிப்பவராகவும் இருக்க வேண்டும். கல்லுாரி பிரிவுகளுக்கு 01.07.2000 பின் பிறந்திருக்க வேண்டும்.
பொதுப்பிரிவில் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை.போட்டியில் பங்கேற்க https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆக.,16 மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் விளையாட்டு அலுவலகத்தை அணுகலாம். 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை 9514 000 777 என்ற எண்ணில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.