/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
/
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
ADDED : செப் 04, 2025 11:25 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை -2025 விளையாட்டு போட்டிகள் ஆக., 25 முதல் செப்.,12 வரை நடக்கிறது. இதன்படி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு பொது மேலாளர் அருண்பிரசாந்த், ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு அங்காடி பொது மேலாளர் தேவேந்திரன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
நீளம் தாண்டுதல், 1200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து, கபடி, செஸ் உள்ளிட்டவைகளில் 500க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.