/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவினா பள்ளியில் விளையாட்டு விழா
/
கவினா பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 17, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 5ம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது.
தலைவர் கண்ணதாசன் பாண்டியன் தலைமை வகித்தார். தாளாளர் ஹேமலதா முன்னிலை வகித்தார். முதல்வர் தேன்மொழி வரவேற்றார். அப்போது மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வயதின் அடிப்படையில் ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பெற்றோரை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோரை வரவழைத்து சான்றிதழ், பரிசு வழங்கினர்.
விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.