
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.
தாளாளர் டி. சந்திரசேகர பாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், சிறப்பு விருந்தினராக ஹார்பர் மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சரவணன், விழா ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, ஜெயபிரகாஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. தடகளம், குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.