/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெறி நாய்கள் கடித்ததில் பலியான புள்ளிமான்
/
வெறி நாய்கள் கடித்ததில் பலியான புள்ளிமான்
ADDED : அக் 23, 2025 11:21 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பள்ளபச்சேரி வனப்பகுதிக்குள் நேற்று காலை 7:00 மணிக்கு வெறி நாய்கள் துரத்தி கடித்ததில் ஆண் புள்ளிமான் பலியானது.
பள்ளபச்சேரியில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்திருந்த பகுதிக்குள் வெறி நாய்கள் துரத்திக் கடித்ததில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் இடது தொடைப் பகுதி மற்றும் கழுத்துப் பகுதிகளில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.
அப்பகுதி மக்கள் தகவலின் பேரில் ராமநாதபுரம் வனச்சரகத்தினர் இறந்த புள்ளிமானை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர். மான்களின் வாழ்விடமாக திகழும் அப்பகுதியில் வெறி நாய்களின் தொந்தரவால் அரிய வகை புள்ளிமான்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

