ADDED : அக் 06, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீமைக்கருவேல மரக்காட்டிற்குள் ஏராளமான புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி நான்கு வழி சாலை பகுதிக்கு வருவது வழக்கம். நேற்று காலை நான்கு வழிச்சாலை இளந்தைகுளம் கிராமப் பகுதியில் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
இதனை கமுதக்குடி வன அலுவலர் அன்பரசி, வனவர் ராதாகிருஷ்ணன் கைப்பற்றினர். பலியான இரண்டு வயது பெண் புள்ளி மானை டாக்டர்கள் பரிசோதனை செய்து கமுதக்குடி வன அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.