/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு
/
எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு
ADDED : ஜூன் 17, 2025 04:57 AM
திருவாடானை : திருவாடானை சப்-டிவிஷனில் எஸ்.ஐ., அந்தஸ்தில் இருந்த எஸ்.பி. பட்டினம் போலீஸ்ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் எஸ்.பி.பட்டினத்தை தவிர மற்ற போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளது.
தற்போது இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓரியூர், பாசிபட்டினம், சோழகன்பேட்டை, சிறுகம்பையூர், வெள்ளையபுரம், புல்லக்கடம்பன் உள்ளிட்ட 72 கிராமங்கள் எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷனில் உள்ளது. இதையடுத்து இங்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார் என போலீசார் கூறினர்.