
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. விழாவில் தினமும் இரவு ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது.
நேற்று காலை கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் கரகம் வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை முத்தரையர் இளைஞர் சங்கம், குத்துக்கல்வலசை கிராம மக்கள் செய்தனர்.