/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை -தனுஷ்கோடி கடலில் நீந்தி 10 மாணவர்கள் சாதனை
/
இலங்கை -தனுஷ்கோடி கடலில் நீந்தி 10 மாணவர்கள் சாதனை
இலங்கை -தனுஷ்கோடி கடலில் நீந்தி 10 மாணவர்கள் சாதனை
இலங்கை -தனுஷ்கோடி கடலில் நீந்தி 10 மாணவர்கள் சாதனை
ADDED : ஏப் 11, 2025 02:18 AM

ராமேஸ்வரம்:இலங்கை-தனுஷ்கோடி கடலில் 34 கி.மீ.,க்கு மஹாராஷ்டிரா மாணவர்கள் 10 பேர் நீந்தி சாதனை படைத்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த 7 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிரம்மதேவ், ராம்வீர் ராகுல், ஹரீஷ்குமார், மகாதேவ் விட்டல், பார்கவி, சவுரியா, தன்வீ பிரதீப் உள்ளிட்ட 10 பேர் மும்பையில் நீச்சல் அகடாமியில் பயிற்சி பெற்று பலபோட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் அதிக நீரோட்டம் உள்ள பாக்ஜலசந்தி கடலில் இலங்கை -தனுஷ்கோடி வரை நீந்தி கடக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 10 மாணவர்கள் மற்றும் உறவினர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் என 21 பேர் இரு விசைப்படகில் புறப்பட்டு இந்திய- இலங்கை கடற்படை பாதுகாப்புடன் இலங்கை தலைமன்னார் சென்றனர்.
நேற்று காலை 6:30 மணிக்கு தலைமன்னார் கடலில் மாணவர்கள் குதித்து நீந்தத் துவங்கினர். அதிக நீரோட்டம், கொந்தளிப்பு காரணமாக நீந்துவதில் சவாலாக இருந்தது. எனினும் விடாமுயற்சியால் 34 கி.மீ., துாரத்தை நீந்தி நேற்று இரவு 8:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
--