/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது
/
கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது
கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது
கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது
ADDED : நவ 14, 2025 01:43 AM

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து கள்ளப்படகில் ராமேஸ்வரம் அருகே வந்த இலங்கையைச் சேர்ந்தவரை மரைன் போலீசார் கைது செய்து மண்டபம் முகாமில் ஒப்படைத்தனர்.
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாசன் 56. இவர் நேற்று முன்தினம் இரவு மன்னாரில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் தெற்கு கடற்கரைக்கு வந்தார். பின் அப்பகுதியில் திரிந்த அவரை மரைன் எஸ்.ஐ., காளிதாஸ் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் 2018ல் மனைவி, இரு மகன்களுடன் அகதியாக தனுஷ்கோடி வந்து தர்மபுரி முகாமில் தங்கி இருந்த போது 2023ல் மனைவி இறந்ததும், பின் மீண்டும் மகன்களுடன் விமானம் மூலம் இலங்கை சென்றதும், அங்கு சூசைதாசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும், மகன்கள் கண்டுகொள்ளாததும் தெரிய வந்தது.
இதனால் இதனால் சாப்பிட கூட வழியின்றி தவித்த சூசைதாசன் அகதியாக வந்ததும் தெரிந்தது. சூசைதாசனை போலீசார் கைது செய்து மண்டபம் முகாமில் ஒப்படைத்தனர்.

