/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாடு திரும்ப நினைக்கும் இலங்கை அகதிகள்: அரசு நடவடிக்கை தேவை
/
நாடு திரும்ப நினைக்கும் இலங்கை அகதிகள்: அரசு நடவடிக்கை தேவை
நாடு திரும்ப நினைக்கும் இலங்கை அகதிகள்: அரசு நடவடிக்கை தேவை
நாடு திரும்ப நினைக்கும் இலங்கை அகதிகள்: அரசு நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 21, 2025 11:26 PM
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கையைசேர்ந்தவர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தும்அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்காததால்எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த நாட்டில் ஏற்பட்ட பிரச்னைகாரணமாக அங்கு வாழ முடியாதவர்களாக வேறு வழியின்றி இலங்கையில் இருந்து வெளியேறி எந்த ஆவணங்களுமின்றிவந்தவர்களை தமிழக அரசு மண்டபம் கேம்ப் பகுதியில் தங்க வைத்துள்ளனர்.
இதில் இனப்படுகொலை நடந்த போதுஅங்கிருந்து வெளியேறி வந்தவர்களில் 455 குடும்பங்களை சேர்ந்த 1358 பேர் தங்கியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை காரணமாக அங்கு வாழ முடியாமல் வந்தவர்களில் 327 பேர் மண்டபம்கேம்ப்பில் தங்கியுள்ளனர்.
இதில் பொருளாதார பிரச்னையால் வந்தவர்களில் 11 குடும்பங்களை சேர்ந்த 38 பேர் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்களை திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்காமல் இரண்டு ஆண்டுகளாகஇழுத்தடிப்பு செய்கிறது.
நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இங்கிருந்து இலங்கை திரும்பி செல்லும் போது அங்கு அவர்களுக்கு வீடுமற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதால் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர்.
இனப்படுகொலை பிரச்னையால் வந்திருப்பவர்கள் நாடு திரும்ப ஆர்வம் தெரிவித்தால் உடன் அனுப்பப்படுகின்றனர்.
அவர்களிடம் அனைத்துஆவணங்களும் இருப்பதால் பிரச்னையின்றி இலங்கை செல்கின்றனர்.பொருளாதார பிரச்னையால் வந்த அகதிகள் மட்டுமே நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.