/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை வீரர்கள் தாக்குதல் பாம்பன் மீனவர் படகு சேதம்
/
இலங்கை வீரர்கள் தாக்குதல் பாம்பன் மீனவர் படகு சேதம்
இலங்கை வீரர்கள் தாக்குதல் பாம்பன் மீனவர் படகு சேதம்
இலங்கை வீரர்கள் தாக்குதல் பாம்பன் மீனவர் படகு சேதம்
ADDED : ஏப் 17, 2025 02:50 AM

ராமேஸ்வரம்,:மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்த பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கினர். கப்பலை கொண்டு நாட்டுப்படகின் மீது மோதி சேதப்படுத்தினர்.
ஏப்.,13ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து ஒரு நாட்டுப்படகில் இன்னாசிமுத்து 45, ஹெடன் 30, களஞ்சியம் 32, கென்னடி 31, சேந்தி 35, யாகு 28, ஆல்பர்ட் 27, ஆகியோர் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் 5 நாட்கள் வரை தங்கி மீன்பிடிக்க சென்றனர்.
ஏப்.,15ல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலை கொண்டு வேண்டு மென்றே படகு மீது மோதினர். இதில் படகின் பக்கவாட்டு மரப்பலகை உடைந்தது. தொடர்ந்து இலங்கை வீரர்கள் தாக்கியதில் இன்னாசிமுத்து, களஞ்சியம், சேந்தி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தால் கைது செய்யப்படுவீர்கள் என துப்பாக்கியை காட்டி இலங்கை வீரர்கள் எச்சரித்து விரட்டினர். சேதமடைந்த படகுடன் அன்றிரவே மீனவர்கள் கரை திரும்பினர். படகில் பழுது நீக்க ரூ.1 லட்சம் செலவாகும் என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.