/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோவை காதலனுக்காக கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்
/
கோவை காதலனுக்காக கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்
கோவை காதலனுக்காக கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்
கோவை காதலனுக்காக கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்
ADDED : ஆக 13, 2025 01:31 AM
ராமேஸ்வரம்: கோவை காதலனுக்காக இலங்கையிலிருந்து கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மனைவி, மகள் விதுர்சியாவுடன் 24, 2003ல் அகதியாக தனுஷ்கோடி வந்து பழநி முகாமில் தங்கியிருந்தார். சில காரணங்களால் 2016ல் வேல்முருகன் குடும்பத்தினருடன் விமானத்தில் இலங்கை சென்றார். ஆனால் இலங்கையில் மகள் விதுர்சியா கல்வி பயில சிரமம் இருந்ததால் ஒரு சில மாதங்களில் மீண்டும் விமானத்தில் தமிழகம் திரும்பினர். பின் பழநியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
விதுர்சியா கோவை தனியார் கல்லுாரியில் படித்த போது அப்பகுதியைச்சேர்ந்த கல்லுாரி நண்பர் கவிபிரகாஷ் இருவரும் காதலித்தனர். இருவரது பெற்றோரின் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் விதுர்சியாவுக்கு இலங்கை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்பட்டதால் 2025 ஏப்., 6ல் விமானத்தில் இலங்கை சென்றார். அங்குள்ள இந்திய துாதரகத்தில் தமிழகம் செல்ல விசா விண்ணப்பித்தார். ஆனால் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியதால் விசா தர முடியாது என அதிகாரிகள் மறுத்தனர். இதனால் வேதனையடைந்த விதுர்சியா காதலுக்காக உயிரை பணயம் வைத்து நேற்று முன்தினம் இரவு மன்னாரில் இருந்து கள்ளப்படகில் நேற்று காலை தனுஷ்கோடி வந்திறங்கினார். அவரிடம் ரூ. 2 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம்) கட்டணம் வாங்கிய இலங்கை படகோட்டிகள் படகுடன் பத்திரமாக விதுர்சியாவை கொண்டு வந்து விட்டு விட்டு இலங்கை திரும்பிச்சென்றனர். விதுர்சியாவை மரைன் எஸ்.ஐ., காளிதாஸ் மற்றும் போலீசார் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.