/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் ஸ்ரீரங்கம் ஜீயர் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
/
திருப்புல்லாணியில் ஸ்ரீரங்கம் ஜீயர் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்புல்லாணியில் ஸ்ரீரங்கம் ஜீயர் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்புல்லாணியில் ஸ்ரீரங்கம் ஜீயர் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 06, 2025 02:46 AM

திருப்புல்லாணி:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள்கோயிலுக்கு வந்தஸ்ரீரங்கம் ஜீயருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர் வராக மகா தேசிகன் சுவாமிகள் நேற்று மாலை 4:00 மணிக்கு திருப்புல்லாணி வந்தார். அவருக்கு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், ஆண்டவன் ஆஸ்ரமம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின் பக்தி பஜனையில் பங்கேற்றார்.
திருப்புல்லாணியில் தொடர்ந்து 60 நாட்கள்தங்கி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கிறார். ஜூலை 10 காலை சாதுர் மாஸ்ய சங்கல்பம் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்கிறார்.
ஜூலை 13ல் சேதுக்கரை கடலில் புனித நீராடுகிறார். திருப்புல்லாணி ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்து தினமும் காலை 8:00 மணி முதல் பூஜைகளை செய்கிறார்.
தினமும் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும் பொதுமக்கள்ஆசி பெறலாம் என ஆஸ்ரம பொறுப்பாளர் ரகுவீர தயாள் தெரிவித்தார்.