/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா
/
கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா
ADDED : ஜன 01, 2025 01:18 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்கிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளது.
இத்தீவில் உள்ள அந்தோணியார் சர்ச் திருவிழாவில் இந்திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக பங்கேற்கின்றனர். முன்பு இங்கு மீன்பிடித்து வலைகளை உலர வைத்தனர்.
1984ல் இலங்கையில் விடுதலைப் புலிகள், ராணுவம் இடையே போர் தீவிரமடைந்ததால் இத்திருவிழாவிற்கு இலங்கை அரசு தடை விதித்தது.
அதன் பின் 2009ல் இலங்கையில் அமைதி திரும்பியதும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்பட்டு இருநாட்டு பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 14, 15ல் திருவிழா நடத்தப்படுமென யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் அறிவித்துள்ளார்.
அதன்படி மார்ச் 14ல் கச்சத்தீவில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிலுவைப் பாதை பூஜை நடக்கும். மறுநாள் (மார்ச் 15) காலை திருவிழா திருப்பலி பூஜை நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 3000 பக்தர்களுக்கும் மேல் படகில் செல்வார்கள். இதே போல் இலங்கையில் இருந்து 2000 பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.