/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட் அருகே தேங்கிய கழிவுநீர்: பொதுமக்கள் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்ட் அருகே தேங்கிய கழிவுநீர்: பொதுமக்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் அருகே தேங்கிய கழிவுநீர்: பொதுமக்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் அருகே தேங்கிய கழிவுநீர்: பொதுமக்கள் பாதிப்பு
ADDED : மார் 05, 2024 04:35 AM

கீழக்கரை: கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் மற்றும் அம்மா உணவகம் அருகே கழிவுநீர் குளம்போல தேங்கியுள்ளதால் சுகாதாரக்கேட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மா உணவகம் அருகே கிழக்குத் தெரு செல்வதற்கான பிரதான சாலை செல்கிறது. நேற்று சாலையின் நடுவே கழிவுநீர் வழிந்தோடி குளம் போல் தேங்கியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்தால் வீசியது.
சாலையின் வழியாக பள்ளி மாணவர்கள் முதியவர்கள் கடந்து வரும் பொழுது பெரும் சிரமத்தை சந்தித்தனர். எதிர்பாராமல் ஒரு மூதாட்டி கழிவுநீர் தேங்கிய பகுதியில் விழுந்து விட்டார். டூவீலர், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறாகவும் முறையான அடைப்பு எடுக்காததாலும் சாலையின் நடுவே 100 மீ., தொலைவிற்கு கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.