/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமரை ஸ்டாலின் முடிவு செய்வார் காதர் முகைதீன் பேட்டி
/
பிரதமரை ஸ்டாலின் முடிவு செய்வார் காதர் முகைதீன் பேட்டி
பிரதமரை ஸ்டாலின் முடிவு செய்வார் காதர் முகைதீன் பேட்டி
பிரதமரை ஸ்டாலின் முடிவு செய்வார் காதர் முகைதீன் பேட்டி
ADDED : மார் 14, 2024 02:58 AM

ராமநாதபுரம்:-''நாட்டின் பிரதமர் யார் என்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார்''என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் பா.ஜ., 375 தொகுதிகளில் வெற்றிபெறும் என ஜோதிடம் கூறி இருக்கின்றனர். பிரதமர் மோடி தோல்வியடைவது நிச்சயம். 'இண்டியா' கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அதன்பின்னர் நாட்டின் பிரதமர் யார் என்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இலங்கை பிரதமரை எங்களது கட்சி நிர்வாகிகள் சந்தித்து அமைப்பு உருவாக்கி மீன் பிடி தொழிலில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும்.
சி.ஏ.ஏ., சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையாணை கோரியுள்ளோம் என்றார். நவாஸ்கனி எம்.பி., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

