ADDED : ஆக 23, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இங்கு ஏற்கனவே ஜூலை 27 ல் முதற்கட்டமாக நடந்தது. இரண்டாம் கட்டமாக ஆக.,18ல் நடந்தது.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம், திருவாடானை தாசில்தார் ஆண்டி, தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு, செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர். இதில் 13 துறைகளின் அரங்குகள் அமைக்கபட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.