/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ராமநாதபுரத்தில் குவிந்த பெண்கள்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ராமநாதபுரத்தில் குவிந்த பெண்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ராமநாதபுரத்தில் குவிந்த பெண்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ராமநாதபுரத்தில் குவிந்த பெண்கள்
ADDED : ஜூலை 15, 2025 10:25 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மகாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வேளாண் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, காவல் துறை, நகராட்சி, வருவாய்துறை என 15 அரசு துறைகள் சேவை மையம் அமைத்திருந்தனர்.
அவற்றில் ஒருசிலர் மட்டுமே மனு அளித்தததால் சேர்கள் காலியாக கிடந்தன. அதே சமயம் மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி ஏராளமான பெண்கள் மதியம் ஒரு மணி வரை காத்திருந்து விண்ணப்பித்தனர். இந்த முகாம் நேற்று துவங்கி 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஜூலை 30 வரை நடக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வின், தாசில்தார் ரவி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.