'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்' நாளை விழிப்புணர்வு ஓட்டம்
'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்' நாளை விழிப்புணர்வு ஓட்டம்
ADDED : ஜூன் 23, 2026 10:06 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசின் 'போதைபொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற உயரிய இலக்கை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற விழிப்புணர்வு ஓட்டம் நாளை (ஜூன் 25) நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலிருந்து காலை 6:30 மணிக்கு துவங்கி பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், ரோமன் சர்ச் வழியாக சென்று மதுரை ரோடு, ராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
இவ்விழிப்புணர்வு ஓட்டமானது 5 கி.மீ.,ஓட்டத்தில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என இருபாலரும் பங்கேற்கலாம்.
இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பொது மக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு 'போதைபொருள் இல்லாத தமிழ்நாடு' உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
