/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபிராமம் நகர கூட்டுறவு வங்கிக்கு மாநில விருது
/
அபிராமம் நகர கூட்டுறவு வங்கிக்கு மாநில விருது
ADDED : நவ 24, 2024 05:17 AM
கமுதி : அபிராமம் நகர கூட்டுறவு வங்கி மாநில அளவில் சிறந்த கூட்டுறவு வங்கியாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.
அபிராமம் பஜார் பகுதியில் நகர் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 71வது கூட்டுறவு வார விழா அமைச்சர்கள் தலைமையில் சேலத்தில் நடந்தது. அப்போது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விற்பனையாளர் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வங்கிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் நகர கூட்டுறவு வங்கி பிரிவில் அபிராமம்நகர கூட்டுறவு வங்கி மாநில அளவில் சிறந்த வங்கியாக அறிவிக்கப்பட்டு அதற்கான விருதை செயல் ஆட்சியர் வேல்முருகன், பொது மேலாளர்முகமது யூசுப்பிடம் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்ட அபிராமம் நகர் கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு அபிராமம் பொதுமக்கள், வங்கியின் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.