ADDED : ஜன 14, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தேனியில் நடந்த மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் ராமநாதபுரம் மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
தமிழகப் பள்ளி கல்வித்துறை சார்பில் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் நடந்தது.
இதில் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ்.கரோலின் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மாவட்டத்திற்கும், பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை பள்ளி தலைமையாசிரியர் விக்டோரினா டயஸ், உடற்கல்வி இயக்குநர் அதிவீர் நாச்சியப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
