தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாநில குத்துச்சண்டை, வாள் சண்டை முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு

மாநில குத்துச்சண்டை, வாள் சண்டை முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு

மாநில குத்துச்சண்டை, வாள் சண்டை முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு


ADDED : ஆக 25, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 13 பேர் மாநில அளவிலான குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டி நடந்தது. வட்டார அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். எடை பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 14 வயது பிரிவில் சோணுமித்ரன், மணீஸ்குமார், பிரதீப்சபரி, வருண் நிவாஸ், ஆப்ரின் பாத்திமா, துனுசியா முதலிடம், 17 வயது பிரிவில் கோவிந்த சிவா, யுவதில்லை ராஜன், செல்வகணேஷ், கிர்த்திக் வர்ஷன் முதலிடம், 19 வயது பிரிவில் லத்திகா கரன் முதலிடம், வாள் சண்டை போட்டியில் நுாருல் பாய்கா, நபிஷா முதலிடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற 13 மாணவர்கள் செப்., முதல் வரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்சா, முகமது உசேன், தமிமுன் அன்சாரி ஆகியோரை தாளாளர் ஜஹாங்கீர், கல்விக் குழு தலைவர் காஜா நஜ்முதீன், தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே பள்ளியிலிருந்து 11 பேர் மாநில குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us