ADDED : பிப் 19, 2024 05:22 AM

அ நிறம் | அளவு
கமுதி : -கமுதி அருகே அபிராமம்டி.எம்., அகாடமியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், கராத்தே,யோகா, பரதநாட்டியம் கற்றுக் வருகின்றனர். தற்போது மதுரையில் மாநில அளவிலானபோட்டிகள் நடந்தது.
இதில் அபிராமம் டி.எம்.,அகாடமி மாணவர்கள் யோகா, சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்ட பிரிவுகளில் 50க்கும்மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகள் மற்றும் கோப்பைகள்பெற்றனர்.
இதையடுத்து டி.எம்., அகாடமி நிறுவனர் மீனலோசனி, சிலம்பம் ஆசிரியர் ஆறுமுகம், வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.
