/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
/
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
ADDED : மே 20, 2025 12:42 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மே 20) முதல் மே 22 வரை நடக்கவுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கிடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான 'ஈ' பிரிவு கிரிக்கெட் போட்டிகள் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கவுள்ளது. லீக் அடிப்படையில் நடக்கவுள்ள இப்போட்டிகளில் கரூர், திருப்பூர், அரியலுார், ராமநாதபுரம் மாவட்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த தொடரில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றில் விளையாட தகுதி பெறுவார்கள்.
செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மைதானத்தில் மே 20ல் ராமநாதபுரம், -அரியலுார் அணியும், மே 21ல் திருப்பூர், -அரியலுார் அணியும், மே 22 ல் ராமநாதபுரம்,- திருப்பூர் அணியும் மோதும் போட்டிகள் நடக்கிறது. செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் மே 20 ல் கரூர்-, திருப்பூர் அணியும், மே 21 ல் ராமநாதபுரம், -கரூர் அணியும், மே 22 ல் கரூர்,- அரியலுார் அணியும் மோதும் போட்டிகள் நடக்கிறது. என ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.