/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில அளவிலான சிறுதானியம் பயிர் விளைச்சல் போட்டி
/
மாநில அளவிலான சிறுதானியம் பயிர் விளைச்சல் போட்டி
ADDED : ஜன 14, 2025 05:05 AM
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் வட்டாரத்தில் சிறுதானிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்றனர்.
முதுகுளத்துாரில் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிரும், 1500 ஏக்கரில் குதிரைவாலி பயிறும், 800 ஏக்கரில் உளுந்து பயறும் சாகுபடி நடக்கிறது.
பயிர்கள் ஒருசில நாள்களில் முழு அறுவடை எட்டும் நிலையில் உள்ளன. விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது.
இதன்படி வெங்கலக்குறிச்சி கிராமத்தில் கேழ்வரகு பயிர் சாகுபடி பயிர் விளைச்சல் மற்றும் விளங்குளத்துாரில் குதிரைவாலி பயிர் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டி நடந்தது.
விருதுநகர் மாவட்ட துணை வேளாண்மை இயக்குனர் லதா, ராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் அமர்லால் முன்னிலை வகித்தனர்.
அரசு அலுவலர்களை தவிர இயற்கை விவசாயி ராமர் போட்டியில் கணக்கிடும் நடுவராக இருந்தார். தேர்வு செய்யப்படும் விவசாயிகள் பயிர்களின் அறுவடை செய்யும் பதிவுகளை கணக்கிடப்பட்டு வேளாண்மை துறை சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு பரிசுக்காக பரிந்துரைக்கப்படும். உடன் முதுகுளத்துார் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், அலுவலர் தமிழ்அகராதி பங்கேற்றனர்.