/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புனித வெள்ளியில் ராமேஸ்வரத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது
/
புனித வெள்ளியில் ராமேஸ்வரத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது
புனித வெள்ளியில் ராமேஸ்வரத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது
புனித வெள்ளியில் ராமேஸ்வரத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது
ADDED : ஏப் 18, 2025 11:23 PM

ராமேஸ்வரம்:
புனித வெள்ளியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் கத்தோலிக்க இளைஞர்கள் இயேசு சிலுவையை சுமந்து வருவதை தத்ரூபமாக ஊர்வலம் நடத்தினர்.
நேற்று புனித வெள்ளியில் ராமேஸ்வரம் ஓலைகுடா மீனவர் கிராமத்தில் உள்ள கத்தோலிக்க இளைஞர் ஒருவர் இயேசு வேடமிட்டும், மேலும் சிலர் வீரர்கள் வேடமிட்டனர். பின் இயேசு சிலுவையை சிரமத்துடன் சுமந்து வருவதும், அப்போது சுற்றி வரும் வீரர்கள் அவரை சவுக்கால் அடித்து இழுத்து செல்வது போன்றும், மாதா வேடமிட்ட பெண் ஒருவர் இயேசுவுக்கு உதவி செய்வதையும், அதனை வீரர்கள் தடுப்பது போன்று தத்ரூபமாக நடித்து ஊர்வலமாக சென்றனர்.
சாலை எங்கும் கூடியிருந்த இறைமக்கள் பிரார்த்தனை செய்தனர். பின் ஓலைக்குடா குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் ஜான்சன் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். தங்கச்சிமடம் அன்னை தெரசா சர்ச், பாம்பன் அன்னை வேளாங்கண்ணி சர்ச்களிலும் சிலுவைப்பாதை நடந்தது.
*ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த சர்ச்சில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் மார்ச் 5ல் துவங்கியது. நேற்று முன்தினம் பெரிய வியாழனை முன்னிட்டு இயேசு சீடர்களுக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு மாலையில் சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், நற்கருணை சிலுவைப் பாதையில் இருந்து எடுத்து சர்ச்சுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
பாதிரியார்கள் சிங்கராயர், சவரிமுத்து, கிரிதரன் ஆகியோர் திருப்பாடுகள் வாசித்து வழி நடத்தினர். இதே போல் சி.எஸ்.ஐ., சர்ச், சக்கரகோட்டை ரோமன் சர்ச், சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட இடங்களில் புனித வெள்ளி சிலுவை பாதைப் பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

