ADDED : நவ 29, 2024 05:34 AM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கானுக்கு பாராட்டு விழா திருப்புல்லாணியில் நடந்தது.
எஸ்.டி.பி.ஐ.,ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தலைவர் பீர் மைதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் புரோஸ்கான், கமிட்டி தலைவர் நசீர் மைதீன், நிர்வாகிகள் கார்மேகம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இஜாஸ் அகமது, கமிட்டி செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் முகமது ஆசிக், சேகு, இணைச்செயலாளர் அக்சன், சதாம் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
