/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருத்தடை அவசியம் ராமநாதபுரத்தில் தெரு நாய்கள் அதிகரிப்பு; ரோட்டில் திரிவதால் மக்கள் அச்சம்

ADDED : ஜன 18, 2025 06:45 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால் எங்கு பார்த்தாலும் சுற்றித்திரிந்து மக்களை கடிப்பதோடு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிவிட்டது.
ராமநாதபுரத்தில் போக்குவரத்து மிகுந்த மதுரை, ராமேஸ்வரம் நடுரோட்டில் நாய்கள் அடிக்கடி குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் நாய் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். நாளுக்குநாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன.
சில வெறி நாய்கள் மக்களை கடிக்கின்றன. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையில் மாதந்தோறும் 20க்கு மேற்பட்டவர்கள் நாய்கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர். வெறிநோய் தாக்கிய நாய்கள் வீட்டில் வளர்க்கும் கோழி, ஆடுகளை கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மேலும் அரசு மருத்துவமனை ரோடு, மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, ரயில்வே பீடர் ரோடு ஆகிய போக்குவரத்து மிகுந்த இடங்களில் உலா வரும் நாய்களால் இரவு நேரங்களில் சிறிய அளவில் விபத்துக்களும் நடக்கிறது.
எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த இனப்பெருக்க தடுப்பூசி இடவேண்டும். வெறிபிடித்த, நோய்வாய்ப்பட்ட நாய்களை பிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.