/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சனவேலி பஸ் ஸ்டாப்பில் துர்நாற்றம் வீசும் கழிப்பறை
/
சனவேலி பஸ் ஸ்டாப்பில் துர்நாற்றம் வீசும் கழிப்பறை
ADDED : ஜூலை 18, 2025 11:37 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி பஸ் ஸ்டாப்பில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அமைந்துள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு மையப் பகுதியாக சனவேலி உள்ளதால் இங்குள்ள பஸ்ஸ்டாப்பிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் நலன் கருதி கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது.
கழிப்பறை கட்டப்பட்ட பின் சில மாதங்கள் மட்டுமே முறையாக பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில் அதன் பின் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் கழிப்பறை முழுவதும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் யாரும் கழிப்பறைக்குள் செல்ல முடியாத நிலையிலும், பயனற்ற நிலையிலும் கழிப்பறை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் ஸ்டாப்பில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.