ADDED : மார் 12, 2026 05:02 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டல்களுக்கு காஸ் சிலிண்டர் அனுப்புவதை நிறுத்தியுள்ளதாக காஸ் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வணிக காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மட்டும் காஸ் சிலிண்டர் விநியோகிக்குமாறு விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நேற்று முதல் ஓட்டல்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகிப்பது நிறுத்தப்பட்டது.
வாலியா காஸ் விநியோக நிறுவன உரிமையாளர் ராஜாராம் பாண்டியன் கூறியதாவது: மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் காஸ் சிலிண்டர் விநியோகித்த நிலையில், தற்போது 10 ஆயிரம் மட்டும் வழங்கப்படுகிறது. காஸ் சிலிண்டர் வரத்தும் குறைந்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் படி முன்னுரிமை அடிப்படையில் காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. இரு நாட்களுக்குள் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
