/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ்சை நிறுத்தி கண்டக்டரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு
/
அரசு பஸ்சை நிறுத்தி கண்டக்டரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு
அரசு பஸ்சை நிறுத்தி கண்டக்டரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு
அரசு பஸ்சை நிறுத்தி கண்டக்டரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு
ADDED : டிச 19, 2025 04:59 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரை 3பேர் ஓட,ஓட விரட்டி வெட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் நகர் கதிரேசன் மகன் மயில்பாண்டியன் 28. அரசு டவுன் பஸ் கண்டக்டரான இவர் தற்போது மானாமதுரையில் வசிக்கிறார். நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற 18ம் நம்பர் டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். இரவு 7:30 மணிக்கு விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை அரிவாளால் வெட்ட வந்த போது அவர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்.
இதனைப் பார்த்த மற்ற பயணிகளும் அலறியடித்து ஓடினர். துரத்திச் சென்ற 3 பேரும் கண்டக்டரை விரட்டி, விரட்டி வெட்டியதில் கையில் பலத்த காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கும் இளையான்குடி போலீசார் அவரை வெட்டியவர்களை தேடிவருகின்றனர்.

